50 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையெடுப்பு திருவிழா : மழை வேண்டி பக்தர்கள் வழிபாடு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கும்மிட்டித்திடல் ஐயனார் ஆலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையெடுப்பு திருவிழா நடைபெற்றது.
50 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையெடுப்பு திருவிழா : மழை வேண்டி பக்தர்கள் வழிபாடு
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே  கும்மிட்டித்திடல் ஐயனார் ஆலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையெடுப்பு திருவிழா நடைபெற்றது.அக்கினி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மழை வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டி கும்மிட்டித்திடல் கிராமத்தில் குதிரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.முத்துப்பேட்டை ஆலங்காடு பகுதியில் மண் குதிரைகள் செய்யப்பட்டு அவற்றிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் முத்துப்பேட்டை, கோவிலூர்,சித்தமல்லி வழியாக குதிரைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.தொடர்ந்து நள்ளிரவில் கும்மட்டித்திடலில் உள்ள அய்யனார் ஆலயத்தில் வைக்கப்பட்டு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

Next Story

மேலும் செய்திகள்