மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு : திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள், மருத்துவமனை பராமரிப்பு குறித்து ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் ஆய்வு மேற்க்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், நோயாளிக்கு சிகிச்சை அளித்த காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.
Next Story

