கொதிக்கும் தார் சாலை...கானல் நீர்... : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம்

அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து திருச்சி பகுதியில் வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கொதிக்கும் தார் சாலை...கானல் நீர்... : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம்
x
கத்தரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வரும் நிலையில், பகலில் வெப்பமும், இரவில் புழுக்கமும் என திருச்சி மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். இதமான சூழலை எதிர்பார்க்கும் மக்கள், மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர். எனினும், வெப்ப தாக்குதலில் இருந்து சமாளிக்க, இளநீர், தர்பூசணி, கிர்ணிபழம், கரும்புச்சாறு, இளநீர், எழுமிச்சை என பழச்சாறுகளுக்கு முக்கியத்தும் அளித்து வருகின்றனர். சாலைகளில் தெரியும் கானல் நீர், தகிக்கும் சாலை என  திருச்சி மக்கள் வெயிலால் கடும் அவதிக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவ்வப்போது வீசும் இதமான காற்று அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்