வங்கியில் 13.75 கிலோ நகை மாயமான விவகாரம் : காவல்துறையிடம் புகார் அளித்த வங்கி நிர்வாகம்

புதுக்கோட்டையில், 13 புள்ளி ஏழு ஐந்து கிலோ நகைகளை, மர்மமான முறையில் உயிரிழந்த உதவியாளர் மாரிமுத்து எடுத்து சென்றிருக்கலாம் என காவல்துறையிடம் பஞ்சாப் வங்கி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
வங்கியில் 13.75 கிலோ நகை மாயமான விவகாரம் : காவல்துறையிடம் புகார் அளித்த வங்கி நிர்வாகம்
x
புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமான வங்கி ஊழியர் மாரிமுத்து, சடலமாக மீட்கப்பட்டார். அவரின் கார் திருவரங்குளம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வங்கி ஊழியரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனிடையே, மாயமான 13 புள்ளி ஏழு ஐந்து கிலோ நகைகளை மாரிமுத்து எடுத்து சென்றிருக்கலாம் என பஞ்சாப் வங்கி நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து நகை அடகு கடைகளுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கி ஊழியர் மாரிமுத்து மற்றும் அவரின் உறவினர்கள் பெயரில் யாராவது நகைகள் அடகு வைத்திருந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, அலுவலக உதவியாளரான மாரிமுத்து எப்படி, வங்கி லாக்கரில் உள்ள நகைகளை எடுத்து சென்றிருக்க முடியும் என அவரின் மைத்துனர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்