நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நீர் வழித்தடங்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
நீர் நிலைகள் நீர் வழித்தடங்களை பாதுகாக்க தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல் துறை ஒத்துழைக்காவிட்டால் ராணுவத்தை கொண்டு நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது வரும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுப்பணிப் துறை, வருவாய் துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாகவும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்