பெறப்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விண்ணப்பங்கள் எத்தனை? - மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்காக பெற்ற விண்ணப்பங்கள் குறித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
x
அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் எத்தனை பிறப்பு, இறப்பு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். விண்ணப்பங்கள் மீது எத்தனை மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன ? என்றும் மேல்முறையீடுகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் விளக்கம் கேட்டுள்ளார். மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதற்கு பின்பற்றப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் அறிவுறுத்தியுள்ளார். குழந்தை கடத்தல் சம்பவம் நடந்து வரும் நிலையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்