தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : பதினோராம் கட்ட விசாரணை தொடங்கியது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே 22-ல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : பதினோராம் கட்ட விசாரணை தொடங்கியது
x
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே 22-ல் போராட்டம் நடைபெற்றது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆனையம் அமைத்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இதுவரை 10 கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் 268 பேர் ஆஜராகி விளக்கமளித்து உள்ளனர். இன்று நடைபெறும் பதினொன்றாம் கட்ட விசாரணைக்காக 73 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும், இந்த விசாரணை வரும் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்