ஒரே விவசாயியின் 2 பசு மாடுகள் தலா 2 கன்றுகளை ஈன்றது : தனது 2 மாடுகளும் கன்றுகளை ஈன்றதால் விவசாயி மகிழ்ச்சி

ராசிபுரம் அருகே பாண்டியன் என்பவர், தனது தோட்டத்தில் வளர்த்து வந்த 2 மாடுகளும், தலா 2 கன்றுகளை ஈன்றதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
ஒரே விவசாயியின் 2 பசு மாடுகள் தலா 2 கன்றுகளை ஈன்றது : தனது 2 மாடுகளும் கன்றுகளை ஈன்றதால் விவசாயி மகிழ்ச்சி
x
ராசிபுரம் அருகே பாண்டியன் என்பவர், தனது தோட்டத்தில் வளர்த்து வந்த 2 மாடுகளும், தலா 2 கன்றுகளை ஈன்றதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி, 5 வயதுடைய இவருடைய பசுமாடு 2 கன்றுகளை ஈன்றது. இதனை தொடர்ந்து தற்போது 3 வயதான மற்றொரு பசு மாடும் அதிகாலையில் 2 கன்றுகளை ஈன்றது. 15 நாட்களுக்குள் ஒரே விவசாயியின் தோட்டத்தில் 2 பசு மாடுகள் தலா 2 கன்றுகளை ஈன்ற சம்பவத்தை, சுற்றுவட்டார மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்