ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் : நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்

நெல்லை டவுனில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவமும், அவர் உயிருக்கு போராடும்போது மக்கள் கண்டுகொள்ளாமல் செல்வதும் என பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் : நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்
x
நெல்லை பழையபேட்டையை அடுத்த சர்தார் புரத்தைச் சேர்ந்தவர்  சுடலை. ஆட்டோ டிரைவரான இவர்,  கடந்த 3ஆம் தேதி இரவு நெல்லை டவுன் ஆர்ச் அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் இந்த கொலை சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அரிவாளால் பல முறை வெட்டுவதும், சுடலை உயிரை காப்பாற்றி கொள்ள கடுமையாக போராடுவதும், சாலையில் செல்பவர்கள் அவரை காப்பாற்றாமல் செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நெல்லை டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில் நெல்லை சர்தார் புரத்தைச் சேர்ந்த முருகன் என்ற பெயரையுடைய இருவர் சேர்ந்து, சுடலையை வெட்டி கொலை செய்தது, தெரியவந்தது. முருகன் என்பவரின் மனைவியுடன் ஏற்பட்ட தவறான தொடர்பே சுடலையின் படுகொலைக்கு காரணம். இதையடுத்து முருகன் என்ற பெயருடைய இருவரை கைது செய்த போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்