ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு சுலபமாக இருந்தது - மாணவர்கள் மகிழ்ச்சி
நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுலபமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்து முடிந்தது. மொத்தம் 155 நகரங்களில் நடைபெற்ற தேர்வில், 15 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வை எழுதினர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு, மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. முன்னதாக தேர்வு எழுத வந்த மாணவர்களிடம், நண்பகல் 12 மணி முதலே சோதனை நடத்தப்பட்டு, அதன் பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, அவர்கள் அணிந்திருந்த அணிகலன்கள் அகற்றப்பட்டது. ஆதார் கார்டு இல்லாமல் வந்த மாணவர்களும், காலதாமதமாக வந்த மாணவர்களும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறும்போது, ஒட்டுமொத்தமாக சுலபமாக இருந்ததாகத் தெரிவித்தனர்.
Next Story