பாலைவனமாகிறதா திருவள்ளூர் மாவட்டம்?

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் திருவள்ளூரில் உள்ள ஏரிகளில் இருந்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
x
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 266 ஏரிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதில் சிரமம் உள்ள நிலையில்  சென்னை குடிநீர் வாரியம் ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து வருகின்றது. இதனால் திருவள்ளூர் மாவட்டமே பாலைவனமாகும் நிலை ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு திருவள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்