உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது - தமிழக அரசு தகவல்

உள்ளாட்சி தேர்தலை தற்போது, நடத்த இயலவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
x
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் விஜயன் வழக்கு தொடர்ந்தார். உள்ளாட்சி நிர்வாக வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில், இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பெற முடியாத நிலை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அதிகாரிகள் அனைவரும் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலவில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. எனினும், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் முயற்சிகளை எடுத்து வருவதாக  பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்