ஒட்டன்சத்திரம் : காவல் நிலையம் முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா

ஒட்டன்சத்திரத்தில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குழந்தையுடன் பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் : காவல் நிலையம் முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா
x
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி காளிமுத்து.பணியை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பியபோது கள்ளிமந்தையம் என்ற இடத்தில், மணல் லாரி மோதியதில் காளிமுத்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாரிமுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக லாரி ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி மணிமேகலை கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை போலீசார்  எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டுவதாகவும் கூறி குழந்தை மற்றும் உறவினர்களுடன் மணிமேகலை காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்