குடிநீரில் சாக்கடை நீர் - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்...

அரியலூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீரில், சாக்கடை நீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டிய மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
x
அரியலூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீரில்,  சாக்கடை நீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டிய மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரியலூர் 2ஆவது வார்டு முனியப்பர் தெருவில் கடந்த சில தினங்களாக குறைந்த அளவு குடிநீர் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, அந்த குடிநீரிலும் சாக்கடை நீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்த‌தை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்