பெண் காவலர் திடீர் தற்கொலை : தொடரும் காவல்துறையினர் தற்கொலைகள்...

திருப்பூரில் பெண் காவலர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் காவலர் திடீர் தற்கொலை : தொடரும் காவல்துறையினர் தற்கொலைகள்...
x
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் காவலர் பர்வீன் பாவி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நல்லூரில் வசித்துவரும் இவர் திடீரென தனது வீட்டில் விஷம் அருந்திய நிலையில், தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பர்வீன் பாவியை  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலே அவர் உயிரிழந்தார். காவல்துறையினர் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில், பர்வீன் பாவியின் தற்கொலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திருப்பூர் ஊரக போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்