தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் விவரம்

கடந்த 1998 ஆம் ஆண்டு சென்னையில் ஆசைத்தம்பியை போலீசார் என்கவுண்டர் நடத்தி சுட்டு கொன்றனர்.
x
கடந்த 1998 ஆம் ஆண்டு  சென்னையில்  ஆசைத்தம்பியை போலீசார்  என்கவுண்டர் நடத்தி சுட்டு கொன்றனர். 

* 2002 ஆம் ஆண்டு  தீவிரவாதி இமாம் அலி மற்றும்  கூட்டாளிகள் 
4 பேரை பெங்களூருவில் தமிழக போலீசார் சுட்டு கொன்றனர்.

* 2003  ஆம் ஆண்டு   தூத்துக்குடியை சேர்ந்த  வெங்கடேச பண்ணையாரை  சென்னையில் போலீசார் சுட்டு கொன்றனர். அதே ஆண்டு  சென்னையில்  பிரபல ரவுடி வீரமணியை  போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.
சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும்  கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், 
சந்திரகவுடா, சேதுமணி ஆகியோரை  கடந்த 2004 ஆம் ஆண்டு  சத்தியமங்கலம் அருகே போலீசார் சுட்டு கொன்றனர். 

* கடந்த 2007 ஆம் ஆண்டு  பிரபல ரவுடி மணல்மேடு சங்கரை  நாகப்பட்டினம் அருகே போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். அதே ஆண்டு  போதை மருந்து கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட வெள்ளை ரவியையும் ஓசூர் அருகே போலீசார் சுட்டு கொன்றனர்.

* 2008 ஆம்ஆண்டு  பிரபல ரவுடி பாபா சுரேஷை சென்னை காசிமேடு பகுதியில் 
போலீசார் சுட்டு கொன்றனர்.

* 2010ஆம் ஆண்டில்  திண்டுக்கல் பாண்டி மற்றும் கூடுவாஞ்சேரி வேலு ஆகிய 2 ரவுடிகளை  சென்னை நீலாங்கரையில் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். அதே ஆண்டு  கோவையில்  2 குழந்தைகளை கடத்தி கொலை செய்த மோகன்ராஜை போலீசார் சுட்டு கொன்றனர். 


* 2012 ஆம்ஆண்டு  சிவகங்கையில்  காவலர் ஆல்பின் சுதனை
கொலை செய்த குற்றவாளிகள் பிரபு மற்றும்  பாரதியை போலீசார் சுட்டுக்கொன்றனர்  2012ஆம் ஆண்டு  வங்கிகளில் கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த 5 பேரை சென்னையில் போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

* 2015 ஆம் ஆண்டு  பிரபல ரவுடி கிட்டப்பாவை  நெல்லை மாவட்டம் பத்தமடையில் வைத்து போலீசார் சுட்டு கொன்றனர். 

* 2017ஆண்டு  சிவகங்கை, ரவுடி கார்த்திகைச்செல்வனை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். அதே ஆண்டு  ஏப்ரல் மாதம் ராமநாதபுரம் ரவுடி கோவிந்தனை போலீசார்  சுட்டு கொன்றனர். 

* கடந்த 2018 ஆம் ஆண்டு ரவுடிகளான  முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் மதுரை சிக்கந்தர் ஆகியோரை, மதுரையில் போலீசார் சுட்டு கொன்றனர். 
இதேபோல் சென்னை தரமணியில் ஆனந்தன் என்ற ரவுடியை  போலீசார் சுட்டு கொன்றனர். 

* இந்த ஆண்டு சேலம் கரியாப்பட்டி பகுதியில் கதிர்வேல் என்ற ரவுடியை போலீசார்  என்கவுண்டரில்  சுட்டு கொன்றனர். 


Next Story

மேலும் செய்திகள்