பெரம்பலூர் : எம்எல்ஏ மீது பாலியல் புகார் அளித்த வழக்கறிஞர் கைது

பெரம்பலூரில் ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் : எம்எல்ஏ மீது பாலியல் புகார் அளித்த வழக்கறிஞர் கைது
x
பெரம்பலூரில் ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சி எம்எல்ஏ மற்றும் வீடியோ கிராபர் மீது பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர் பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக  பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னம் பகுதியில் காரில் சென்று  கொண்டிருந்த அருளை, பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். எனினும் அவர் மீதான புகார் குறித்த விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் ஜீப்பில் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே போலீசார் பொய் வழக்கில் தம்மை கைது செய்துள்ளதாக அருள் குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்