கூடங்குளம் : முதல் அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் இன்று தொடங்குகிறது.
கூடங்குளம் : முதல் அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம்
x
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் இன்று தொடங்குகிறது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்து சில வாரங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ள நிலையில், பல்வேறு சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வெப்பநீர் சோதனை ஓட்டம் இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இச்சோதனையின் போது அணுஉலையிலிருந்து நீராவி வெளியேற்றும் போது பயங்கர சத்தத்துடன் அதிக வெண்புகை வெளியேறும் எனவும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்