வாகனம் மோதி சிறுத்தை குட்டி உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை குட்டி உயிரிழந்தது
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை குட்டி உயிரிழந்தது. அதன் உடலை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பவானிசாகர் வனச்சரகர் ஜான்சன், சிறுத்தை குட்டியின் உடலை மீட்டு, காராட்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு அதை கொண்டு சென்றார். வனப்பகுதியில், வாகனங்களை அதி வேகமாக இயக்கக் கூடாது என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Next Story

