ராசிபுரம் குழந்தை விற்பனை சம்பவம் : இடைத்தரகர்களுக்கு 13 நாள் நீதிமன்ற காவல்
ராசிபுரம் குழந்தை விற்பனை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள லீலா மற்றும் செல்வி ஆகியோரை 13 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக
அமுதவல்லி அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன், இடைத்தரகர் பர்வீன். நிஷா, அருள்சாமி ஆகிய 6 பேர்
ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில், இடைத்தரகர்களாக செயல்பட்ட லீலா மற்றும் செல்வி ஆகியோர் கைது செய்யட்டுள்ளனர். அவர்கள் திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி தனம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இடைத்தரகர்கள் லீலா மற்றும் செல்வி ஆகியோரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story