முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டம் : சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அனுமதி

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு முன்னோடியாக சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான ஆய்வினை தொடங்குவதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லை பெரியாறில் புதிய  அணை கட்டும் திட்டம் : சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அனுமதி
x
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னோடியாக சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. ஆனால்,  பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால், கேரள மாநில வனத்துறையின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது ஆய்வுக்கான அனுமதியை வனத்துறை தலைமை காப்பாளர்  வழங்கியுள்ளார்.  ஹைதராபாத்தை சேர்ந்த பிரகதி லேப் என்கிற தனியார் நிறுவனம் ஆய்வினை மேற்கொள்ள உள்ளது. ஆண்டின் நான்கு பருவங்களிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு எப்படி இருக்கும் என ஆய்வு மேற்கொள்ளப்படும்.  அதன் அடிப்படையில் புதிய  அணை கட்டுவது தொடர்பான திட்டம் வகுக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்