அய்யனார் கோவில் அருவியில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு

அய்யனார் கோவில் அருவியில் குளிப்பதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலித்தும், அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
x
ராஜபாளையம் அய்யனார் கோவில் அருவியில் குளிப்பதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலித்தும்,  அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக அரசு அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இங்கு குளிப்பதற்கு கட்டணமாக வனத்துறையினர் நபர் ஒருவருக்கு 50 ரூபாய் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பெண்கள் உடை மாற்றுவதற்கு அறைகள், குளிக்க செல்ல சரியான பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம் சாட்டியுள்ள மக்கள், வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்