வறண்டு கிடக்கும் ஆழ்துளை கிணறுகள்...நிலத்தடி நீர் மட்டம் எழுப்பும் அபாய ஒலி

மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் மிக வேகமான குறைந்து வருகிறது.
x
மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் மிக வேகமான குறைந்து வருகிறது. ஆழ்துளை கிணறுகள் வறண்டு வரும் நிலையில், கிடைக்கும் தண்ணீரும் உவர்ப்பு தன்மை கொண்டுள்ளது. சென்னையின் நீர்மட்டம் பாறைகளுக்கு கீழே சென்றுள்ளதால்  நிலைமை அபாய கட்டத்தை எட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் இந்த ஆண்டில் 5 புள்ளி 40 மீட்டருக்கு சென்றுள்ளது. 2010 ஆண்டில் 3 புள்ளி 40 மீட்டரில் நீர்மட்டம் இருந்துள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தர்மபுரி முதலிடத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு 8 புள்ளி 89 மீட்டர் ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர் 2019 ஆம் ஆண்டில்12 புள்ளி 41 மீட்டருக்கு கீழே சென்றுள்ளது. 

பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களும் மிகக் கடுமையான பாதிப்பினைக் கண்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 3 புள்ளி 16 மீட்டரில் கிடைத்த  நிலத்தடி நீர் 2019 ஆண்டில் 11 புள்ளி 02 மீட்டருக்கு கீழே சென்றுள்ளது. புதுக்கோட்டையில் 3 புள்ளி 18 மீட்டரில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது  6 புள்ளி 50 மீட்டருக்கும் கீழே சரிந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 3 புள்ளி 07 மீட்டரில் இருந்து 8 புள்ளி 34 மீட்டருக்கும் கீழே சென்றுள்ளது. 

காஞ்சிபுரத்தில் 2 புள்ளி 39 மீட்டரில் இருந்து, 3 புள்ளி 88 மீட்டருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 புள்ளி 13 மீட்டரில் இருந்து  5 புள்ளி 40 மீட்டருக்கு கீழே சென்றுள்ளது.
கடலூரில் 3 புள்ளி 17  மீட்டரில் இருந்து 5 புள்ளி 67 மீட்டருக்கு கீழேயும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 புள்ளி 27 மீட்டரில் இருந்து 6 புள்ளி 71 மீட்டருக்கு கீழேயும் நீர்மட்டம் குறைந்துள்ளது.

வேலூரில் 7 புள்ளி 09 மீட்டரில் இருந்து 8 புள்ளி 73 மீட்டருக்கு கீழேயும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 புள்ளி 67 மீட்டரில்  இருந்து 6 புள்ளி 90 மீட்டருக்கு கீழேயும் சென்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் 8 புள்ளி 88 மீட்டர் ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 11 புள்ளி 61 மீட்டருக்கு கீழே சென்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 10 புள்ளி 65 மீட்டரில் இருந்து 11 புள்ளி 48 மீட்டருக்கு கீழே சென்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 புள்ளி 34  மீட்டர் ஆழத்தில் இருந்து 8 புள்ளி 47 மீட்டருக்கு கீழே சென்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 6 புள்ளி 79 மீட்டரில் கிடைத்த நிலத்தடி நீர் 7 புள்ளி 67 மீட்டருக்கு கீழ் சென்றுள்ளது. திருச்சியில் 7 புள்ளி 93 மீட்டரில் இருந்து, 9 புள்ளி 80 மீட்டருக்கு கீழேயும், கரூரில் 5 புள்ளி 77 மீட்டரில் இருந்து 5.89 மீட்டருக்கும் கீழே சென்றுள்ளது.

தஞ்சாவூரில் 2 புள்ளி 27 மீட்டரில் கிடைத்த நிலத்தடி நீர், தற்போது 2 புள்ளி 54 மீட்டராக குறைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 புள்ளி 83 மீட்டரில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 2 புள்ளி 82 மீட்டருக்கும் கீழே குறைந்துள்ளது. மதுரையில் 5 புள்ளி 66 மீட்டரில் இருந்து  6 புள்ளி 80 மீட்டருக்கும் கீழ் சென்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 புள்ளி 57 மீட்டரில் இருந்து தற்போது 9 புள்ளி 44 மீட்டருக்கும் கீழே சென்றுவிட்டது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 புள்ளி 89 மீட்டரில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 4 புள்ளி 94 மீட்டருக்கும் கீழே சென்றுள்ளது. விருதுநகரில் 6 புள்ளி16 மீட்டர் ஆழத்தில் இருந்து 8 புள்ளி 64 மீட்டருக்கு கீழேயும் சென்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 3 புள்ளி 88 மீட்டர் ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர் 2019 ஆம் ஆண்டில் 5 புள்ளி 77 மீட்டருக்கும் கீழே சென்றுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறித்த தகவல்கள் அபாய ஒலியை எழுப்பும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அரசுக்கும் மக்களுக்கும் முக்கிய கடமையாக உள்ளது,

Next Story

மேலும் செய்திகள்