மாற்று திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி : இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் ...

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான நட்புறவு கைப்பந்து போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று தங்கப் பத்தகத்தை கைப்பற்றியது.
x
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான நட்புறவு கைப்பந்து போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று தங்கப் பத்தகத்தை கைப்பற்றியது. இந்திய அணியில் ஈரோட்டை சேர்ந்த பச்சமுத்து மற்றும் மோகன் உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 மாற்று திறனாளிகள் இடம் பெற்றிருந்தனர். சொந்த ஊருக்கு திரும்பிய பச்சமுத்து மற்றும் மோகன் ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் தாங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டதாகவும், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்று  அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்