ஐபிஎல் போட்டி பார்த்து விட்டு ஊர் திரும்பிய போது விபத்து

சென்னையி​ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்த்துவிட்டு காரில் ஊர் திரும்பிய போது நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டி பார்த்து விட்டு ஊர் திரும்பிய போது விபத்து
x
சேலத்தை சேர்ந்த பாலமுருகன், அருண்குமார், உள்ளிட்ட 7 பேர் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு காரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி கனியாமூர் கைகாட்டி அருகே டீசல் போட்டுவிட்டு லாரி ஒன்று சாலையில் ஏற முயன்றது. அப்போது வேகமாக சென்ற கார், லாரி மீது மோதியது.இந்த விபத்தில் அருண்குமார், சுதீஷ்,பாலமுருகன் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்