"குண்டு வெடிக்கும்" - மிரட்டல் எதிரொலி : ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை
தென் மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து,பல்வேறு இரயில் நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, பல்வேறு இரயில் நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஓசூர் ரயில் நிலையத்திலும் ரயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரயில்களில், பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த போலீசார், ரயில்களில் இருந்து இறங்கி செல்லும் பயணிகளிடமும் சோதனை நடத்தினர். இந்த சோதனையால் ஓசூர் ரயில் நிலையத்தில் சிறிது பரபரப்பு காணப்பட்டது. இது தவிர தமிழக எல்லைப் பகுதியான ஜுஜுவாடி உள்ளிட்ட சோதனைச் சாவடிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story