சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3.4 கிலோ தங்கம் பறிமுதல் : கடத்தல் தொடர்பாக டெல்லி பெண்கள் 2 பேர் கைது

தாய்லாந்து, அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3.4 கிலோ தங்கம் பறிமுதல் : கடத்தல் தொடர்பாக டெல்லி பெண்கள் 2 பேர் கைது
x
தாய்லாந்து, அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட  ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னைக்கு வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, அபுதாபி மற்றும் தாய்லாந்தில் இருந்து வந்த விமானங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 66 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ  தங்க கட்டிகள் மற்றும் 46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரையும் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்