16 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் -வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற பெண் கைது

காஞ்சிபுரம் அருகே, வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், வேளாங்கண்ணி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
16 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் -வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற பெண் கைது
x
காஞ்சிபுரம் அருகே, வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், வேளாங்கண்ணி என்ற பெண் கைது செய்யப்பட்டார். உத்திரமேரூர் அடுத்த மானாமதி கண்டிகையை சேர்ந்த 16 வயது சிறுமி, கோனேரிக்குப்பம் பகுதியில் வீட்டு வேலைக்கு சென்றார். அவரை அழைத்துச் சென்றவர்களே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தினர். சிறுமியின் பெற்றோர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமனியிடம், இதுகுறித்து புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த பெருநகர் போலீசார், வேளாங்கண்ணியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்