ரூ.20 லட்சம் கையாடல் வழக்கு : அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு

கையாடல் வழக்கில் மூன்று ஆண்டுகளாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.20 லட்சம் கையாடல் வழக்கு : அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
x
தென் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பணியாற்றிய வடிவுக்கரசி உள்ளிட்ட இருவர், போலி ஆவணங்கள் தயாரித்து, 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படலாம் எனக் கூறி, இருவரும் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் 5 லட்சம் ரூபாய் பிணை செலுத்தும்படி நிபந்தனை விதித்து, இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில், 5 லட்சம் ரூபாயை வழக்கு எண் மீது டிபாசிட் செய்துள்ளதாகக் கூறி, இது சம்பந்தமான நிபந்தனையை மாற்றியமைக்கக் கோரி வடிவுக்கரசி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, வழக்குப்பதிவு செய்து மூன்று ஆண்டுகள் கடந்தும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்