போக்சோவில் சிறுமிகளுக்கான வயதை 16- ஆக குறைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால் போக்ஸோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
போக்சோவில் சிறுமிகளுக்கான வயதை 16- ஆக குறைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை
x
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததற்காக விதிக்கப்பட்ட  தண்டனை ரத்து செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் சபரிநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து உத்தரவிட்டார். போக்ஸோ சட்டத்தை விளம்பரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் அதுதொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இந்த குற்றங்களை குறைப்பதற்கு அதிக முயற்சிகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். வளர் இளம் பருவ உறவு பற்றி எடுக்கப்படும் படங்களில் போக்சோ சட்டம் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் போக்ஸோ சட்டத்தில் 18 வயது வரை சிறுமிகள் என வரையறுத்து உள்ளதை 16 வயதாக குறைக்க வேண்டும் என நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார். 16 வயதை தாண்டியவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால் போக்ஸோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். சமூகத்தின் பிணியாக மாறியுள்ள போக்ஸோ குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய, மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்