16 வயது சிறுமிபாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் : வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற பெண் கைது

வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் வேளாங்கண்ணி என்ற பெண் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது சிறுமிபாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் : வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற பெண் கைது
x
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள மானாமதி கண்டிகையை சேர்ந்த 16 வயது சிறுமி கோனேரிக்குப்பம் பகுதியில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அழைத்துச் சென்றவர்களே அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும்  பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி உள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமனியிடம் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெருநகர் போலீசார், அந்த சிறுமியை அழைத்துச்சென்ற பெண் வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் தீவிர விசாரணையில் முக்கிய பெண் குற்றவாளியான வேளாங்கண்ணி காஞ்சிபுரத்தில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று வேளாங்கண்ணியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்