சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் குறித்த வழக்கு : விசாரணை ஜூன் 6 - ந்தேதிக்கு தள்ளி வைப்பு

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக சமூக நலத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் குறித்த வழக்கு : விசாரணை ஜூன் 6 - ந்தேதிக்கு தள்ளி வைப்பு
x
சத்துணவு முட்டை கொள்முதல் குறித்த வழக்கின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய் நாராயண், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இரண்டு வாரங்கள் கலந்து ஆலோசித்த பிறகே முட்டை கொள்முதல் குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக வாதிட்டார். இதனையடுத்து ஒப்பந்த காலம் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து முட்டை கொள்முதல் செய்வது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை ஏற்கனவே முட்டை கொள்முதல் செய்யும் நிறுவனத்திடம் அதனை வாங்குவதா வேண்டாமா என்பது குறித்தும் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை கோரிய மனு குறித்தும் முடிவெடுக்க வழக்கின் விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்