இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் - சாலையில் தவறி விழந்த பெண்
பதிவு : ஏப்ரல் 26, 2019, 05:28 PM
இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரில் நிலைதடுமாறி பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை மணலியை சேர்ந்த மகேந்திரன் தனது மனைவி ஜெகதீஸ்வரி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் கொரட்டூருக்கு சென்றுள்ளார்.மாதவரம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் அமர்ந்திருந்த ஜெகதீஸ்வரி வண்டியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னந்தலையில்  பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி ஜெகதீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்ற நிலையில் இட பற்றாக் குறையினால் தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்

விழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

1061 views

மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

74 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

68 views

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

30 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

11 views

பிற செய்திகள்

துபாயில் தவித்து வரும் கணவரை மீட்க கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் குழந்தைகளுடன் மனைவி மனு

துபாய் நாட்டில் தவித்து வரும் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி குழந்தைகளுடன் மனு அளித்துள்ளார்.

6 views

கொரோனா பரிசோதனை கட்டண விவகாரம் -"ஓரிரு நாளில் கட்டணம் நிர்ணயித்து அரசாணை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் விரைவில் நிர்ணயித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

15 views

உறவினர்கள் 50 பேருடன் நடைபெற்ற திருமணங்கள்

அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருமண விழாக்களில் உறவினர்கள் 50 பேர் பங்கேற்றனர்.

5 views

சிவகங்கை: தப்பாட்ட கலைஞர்கள் நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைகிராமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களான தப்பாட்ட கலைஞர்கள், நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

10 views

"உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும்" உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை இரவு 9.30 மணி வரை நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் என்று சேலம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 views

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

மயிலாடுதுறையில் தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 54 பேர், அவர்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.