வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம்

நெல்லையில் உள்ள பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம்
x
நெல்லையில் உள்ள பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் விழாவின் சிறப்பு நிகழ்வான தேரோட்டம் காலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த சுவாமி, தேரில் நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரை இழுக்கும் போது, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்