சென்னையில் தீவிரவாதி கைது - திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில், குடியரசு துணை தலைவர் திறந்து வைக்க இருந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
x
சென்னையில், குடியரசு துணை தலைவர் திறந்து வைக்க இருந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த கந்தர்ப்ப தாஸ் என்பவர், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாதுகாவலராக கடந்த ஆறுமாதமாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அவர் தங்கியிருந்த அறையில் நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கந்தர்ப்பதாஸ் தான் உல்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய உளவுத்துறை கியூ பிரிவு போலீசார், தீவிரவாதி கந்தர்ப்பதாஸை கைது செய்துள்ளனர்.  முதல் கட்ட விசாரணையில், தீவிரவாதி கந்தர்ப்பதாஸ், பணி புரிந்து வந்த மருத்துவனை கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது.  முதல் கட்ட விசாரணையில் தீவிரவாதி பணியாற்றி வந்த மருத்துவனை கட்டுமான பணிகள் முடிந்து, அடுத்தவாரம் திறக்கபட உள்ளது. இதனை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்க உள்ளதால், கைதான தீவிரவாதி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்