குழந்தைகள் விற்பனை - திடுக்கிடும் தகவல்கள்

ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளியிடம் இருந்து குழந்தைகளை வாங்கியவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களிடமும் விசாரணை நடத்த நாமக்கல் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
x
* பச்சிளம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளி, அவரின் கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலி பர்வீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அமுதவள்ளி தலைமையிலான கும்பல், இதுவரை 9 குழந்தைகளை விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

* ஈரோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலி பர்வீன் அளித்த வாக்குமூலத்தில், அமுதவள்ளியிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி விற்றதாக கூறியுள்ளார். அமுதவள்ளியே, 3 குழந்தைகளை நேரடியாக விற்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்த விவகாரத்தில் கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலி பர்வீனிடம் 2 குழந்தைகளை விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

* கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குழந்தைகள் யார் யாரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.விற்பனை செய்யப்பட்ட குழந்தைகள், கடத்தப்பட்டதா அல்லது மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டதா என்பது குறித்த விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்