5 மாதங்களை கடந்த டெல்லி பெண் பாலியல் வழக்கு

கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு 5 மாதங்களை கடந்த நிலையிலும் இன்னும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
5 மாதங்களை கடந்த டெல்லி பெண் பாலியல் வழக்கு
x
கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு 5 மாதங்களை கடந்த நிலையிலும் இன்னும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வசந்த், தினேஷ், புருஷோத்தமன், அன்பரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வழக்கை விசாரித்த போலீசார் தேர்தல் காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்யப்பட்டதால்  வழக்கில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தேர்தல் முடிவடைந்ததால் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்