சர்ச்சை வீடியோ - 4 நாளில் பாய்ந்தது குண்டர் சட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டர்.
சர்ச்சை வீடியோ - 4 நாளில் பாய்ந்தது குண்டர் சட்டம்
x
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டர். வீடியோ வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டதன் பேரில் சிவக்குமார் நேற்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதே போன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Next Story

மேலும் செய்திகள்