மணல் கொள்ளை விவகாரம் : ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கும் நடைமுறை - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மணல் கொள்ளையை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ஆற்றங்கரைகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மணல் கொள்ளை விவகாரம் : ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கும் நடைமுறை - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு நதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு,  மணல் கொள்ளையை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ஆற்றங் கரைகளிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மணல் கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கடமை தவறினால் அவர்களை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்