வீட்டு வேலைக்கு அழைத்து சென்று 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக எழுந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டு வேலைக்கு அழைத்து சென்று 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
x
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள மானாமதி கண்டிகையை சேர்ந்த 16 வயது சிறுமி கோனேரிக்குப்பம் பகுதியில் வீட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார். ஈஸ்டர் பண்டிகைக்காக வீட்டிற்கு வந்த அந்த சிறுமி மீண்டும் வீட்டு வேலைக்கு செல்லமாட்டேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது தன்னை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற வேளாங்கண்ணி, அற்புதராஜ் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த சிறுமி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் தன்னை மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிராம மக்களுடன் சேர்ந்து சென்று இந்த சம்பவம் தொடர்பாக  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமனி உத்தரவின்பேரில் பெரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வேளாங்கண்ணி அற்புதராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்