காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் - கிராம மக்கள் கோரிக்கை

பரமத்திவேலுர் அருகே 6 பேர் மூழ்கி உயிரிழந்த காவிரி ஆற்றில் காகித ஆலை அமைத்துள்ள மணல் திட்டை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுர் அடுத்துள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில்  மூழ்கி அண்மையில் உயிரிழந்தனர். புகளூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கு தேவையான தண்ணீர் எடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே மணலில் திட்டு அமைத்து பள்ளம் தோண்டியதே காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதனை அகற்றி பொத்தனூருக்கு குடிதண்ணீர் வழங்க கோரி, கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்