தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என உழைத்த அனைத்து கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என உழைத்த அனைத்து கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என உழைத்த அனைத்து கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி
x
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு முழு வெற்றிக் கூட்டணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்பினருக்கும் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மதவெறி, ஊழல் ஆட்சிகளை ஒரே நேரத்தில் வீழ்த்தி, மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில், மக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும் என ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  தோல்வி பயத்தின் காரணமாக ஆளும் கட்சியினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும், வெறுத்து விலக்கி வைப்பார்கள் என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். வன்முறையைத் தூண்டிவிட்டு, நம் கவனத்தைத் திசை திருப்பி, வாக்காளர்கள் மனதில் அச்சத்தை விதைத்து, மிச்சமிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியைத் தட்டிப் பறித்து, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என ஆளும் ஆட்சியாளர்கள் கணக்குப் போடுகிறார்கள் என்றும், மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 4 தொகுதி இடைத்தேர்தலில் மாநில அமைச்சர்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் அதிகார பலத்தை பயன்படுத்தி , தி.மு.க. வெற்றியைக் களவாடுவதில் முனைப்பு காட்டுவார்கள் என்றும், அதனை முறியடித்திடும் வகையில் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும் என்றும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார். மே ஒன்றாம்  தேதி முதல் இடைத்தேர்தல் களத்தில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், வீடு வீடாக சென்று தோழமை கட்சியினருடன் வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்