விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
திருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை திருநகரை சேர்ந்த பாஸ்கரன் விபத்தில் இறந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆஸ்டின்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதிர்ச்சி அடைந்தனர். அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சாலையில் வெளிச்சம் இல்லாத இடத்தில் கல்லை போட்டுவிட்டு சென்றார். அவ்வழியாக வந்த வேன் ஓட்டுநர் ஒருவர், சாலையில் கிடக்கும் கல்லை அகற்ற முயன்ற போது, அந்த நபர் தடுத்து நிறுத்துகிறார். அதன் பிறகு இரு சக்கர வாகனத்தில் வந்த, பாஸ்கரன் கல்லில் மோதி கீழே விழுந்தார். அவரிடம் இருந்த, செல்போன், நகை ஆகியவற்றை திருடிக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி செல்கிறார். இதையடுத்து விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார்,  தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த ராஜாவை கைது செய்தனர்.  ராஜா மீது 3 பிரிவின் கீழ் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்