தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்

தூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்
x
தூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். உடன்பிறந்த சகோதரரை சுட்டுக்கொன்ற வழக்கில், திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த பில்லா ஜெகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுசெயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க விதிகளை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். திமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்