காய்கறிகளின் விலை 30% வரை உயர்வு...

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
x
கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறியின் விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. வரத்து குறைவால், விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக காய் கனி மலர் அங்காடியின் செயலாளர் முத்துகுமார் தெரிவித்துள்ளனர். 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவித்தார். இதேபோல், பீன்ஸ் 30 ரூபாயிலிருந்து தற்போது 90 ரூபாய்க்கும், இஞ்சி 60 ரூபாயிலிருந்து தற்போது 100 ரூபாய்க்கும், கேரட் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்