"வாக்காளர் பட்டியலில் 37,000 பெயர்கள் இல்லை" - மாவட்ட ஆட்சியரிடம் பி.டி. செல்வகுமார் மனு

அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கின் காரணமாக சுமார் முப்பத்தி ஏழாயிரம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போனதாக கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவரான பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் 37,000 பெயர்கள் இல்லை - மாவட்ட ஆட்சியரிடம் பி.டி. செல்வகுமார் மனு
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கின் காரணமாக சுமார் முப்பத்தி ஏழாயிரம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போனதாக கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவரான பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமான அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்