வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை

மதுரை சம்பவத்தையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 3 அடுக்கு முறையில் 24 மணி நேரமும் பாதுகாக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
வாக்கு  எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை
x
மதுரை சம்பவத்தையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 3 அடுக்கு முறையில் 24 மணி நேரமும் பாதுகாக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் பெண் தாசில்தார் உள்ளிட்டோர் அனுமதியின்றி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரத்தையடுத்து வாக்கு  எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு  முக்கிய ஆலோசனை நடத்தினார்.  

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா மற்றும் தேர்தல், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

காணொலி காட்சி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும்  காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆலோசனையில்  பங்கேற்றனர். அப்போது வாக்கு  எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 3 அடுக்கு முறையில் 24 மணி நேரமும் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

அங்கு யாரும் நுழையாவண்ணம் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்க வேண்டும்,  முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19 ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பறக்கும் படைகள் உள்ளிட்டவை   குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்