மகள் இறப்பில் சந்தேகம்-பெற்றோர் புகார் : கணவன் கைது-நிர்க்கதியாய் 3 குழந்தைகள்

ஓமலூர் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் போலீசார் கணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகள் இறப்பில் சந்தேகம்-பெற்றோர் புகார் : கணவன் கைது-நிர்க்கதியாய் 3 குழந்தைகள்
x
ஓமலூர் அருகே உள்ள பாலமேடு பகுதியை சேர்ந்த அருண்குமார். அதே ஊரை சேர்ந்த நித்யா என்பவரை 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ள நிலையில் தினமும் அருண்குமார் மது அருந்திவிட்டு வந்து நித்யாவை கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி நித்யா விஷம் குடித்ததாகவும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகவும் நித்யாவின் பெற்றோரிடம் அருண்குமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நித்யாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அருண்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். நித்யாவை அடித்து கொலை செய்துவிட்டு அருண்குமார் நாடகம் ஆடுவதாகவும் நித்யாவின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். தற்போது அருண்குமார், நித்யாவின் 3 குழந்தைகளும் நிர்கதியாக இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்