பொள்ளாச்சி பாலியல் வழக்கு : விசாரணையை ஏற்பது குறித்து பதிலளிக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை விசாரிப்பது குறித்து பதிலளிக்காதது பற்றி விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ, இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு : விசாரணையை ஏற்பது குறித்து பதிலளிக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
x
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற நீதிபதி, ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் பெண்கள் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அடங்கிய குழுவை நியமிக்க கோரி வழக்கறிஞர் வாசுகி என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இதற்கு, சி.பி.சி.ஐ.டி யை சேர்ந்த பெண் எஸ்.பி. தாக்கல் செய்த பதில்மனுவில், வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய போதும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து சி.பி.ஐ., தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என கூறப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை சி.பி.ஐ. வசம் ஏன் ஒப்படைக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு  வழக்கறிஞர் இதுவரை சிபிஐ தரப்பில் எந்த பதிலும் வராததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கும்போது இந்த ஆதாரங்களும் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்