"நேரில் ஆஜராக வேண்டும்" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
நேரில் ஆஜராக வேண்டும் - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
x
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.  மருத்துவ குழு அமைத்தால் மட்டுமே தங்கள் மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராவார்கள் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பலோ நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை இல்லை என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்ப்பு அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்த்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதை காரணம் காட்டி கடந்த 10ம் தேதி மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் நாளை ஆஜராகுமாறு அப்பலோ மருத்துவர்கள் 10 பேர் மற்றும் 2 டெக்னீசியன்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இல்லாவிட்டால்  நீதிமன்ற தீர்ப்பு நகலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்